மட்டக்களப்பு – களுவாங்கேணி விவேகானந்தா வித்தியாலயம் இம்முறை (2022) கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற எல்லே போட்டியில் சம்பியன் பட்டம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
கடும் சிரமத்தின் மத்தியில் இந்த வெற்றியை பெற்றதாகக்கூறும் எல்லே அணியின் தலைவர், தம்மிடம் போசனைக் குறைபாடு இருப்பதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வீரர்கள் தமது அணியில் இருப்பதாகக் கூறும் அவர் – போசனைக்கான உணவு, காலணி, தாம் அணிந்து விளையாடும் உடைகள் என்பவற்றை பெறுவது கடினமாக இருக்கிறது. இவை கிடைத்தால் தமது வெற்றிக்கு ஏதுவாக இருக்கும் என்கிறார்.
சாதிக்கத்துடிக்கும் மாணவர்கள்
இந்த மாணவர்களுக்கான உற்சாகப்படுத்தல்களையும், ஒத்துழைப்புகளையும், ஆதரவுகளையும் வழங்க விரும்பும் தாயக, புலம்பெயர் உறவுகள் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொள்ளமுடியும்.