நினைத்துப்பார்க்க முடியாத வலி
பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸ் முதன்முறையாக தங்களது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பில் கேட்ஸ் உடனான விவாகரத்து நினைத்துப்பார்க்க முடியாத வலியை கொடுத்தாக தெரிவித்திருக்கிறார்.
“சில காரணங்களால் என்னால் திருமண வாழ்க்கையை தொடர முடியவில்லை. கொரோனா காலத்தில் எனக்கு தேவையான தனிமை கிடைத்தது. நாங்கள் இருவரும் இணைந்தே அறக்கட்டளையை நடத்தினோம். ஆகவே, அலுவல் ரீதியான பிரிவும் அவ்வளவு எளிதாக இல்லை.
தனித்துவமான உழைப்பை கொடுக்க வேண்டிய கட்டாயம்
நான் பிரியவேண்டிய நபருடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. சில நேரங்களில் காலை 9 மணிக்கு நான் அழுதுகொண்டிருப்பேன். அடுத்த ஒருமணி நேரத்தில் அவரிடம் இணைய வழியாக காணொளியில் பேச வேண்டியிருக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் என்னுடைய தனித்துவமான உழைப்பை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.
திருமணமாகி 27 வருடம் கழிந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றநிலையில் அந்த வருடம் ஓகஸ்டில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.