இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் ஜீஸ் நோர்மன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
சிறிலங்காவை கண்காணிப்பில் வைத்திருக்கும் பிரித்தானியா
இந்த நிலையிலேயே பிரித்தானியா இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான சிறந்த பொறிமுறை பிரித்தானியாவிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் சிறிலங்கா தமது பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.