காதலி வன்புணர்வு
காதலித்த 15 வயதே ஆன சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குடு்படுத்திய இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி மேற்குறிப்பிட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
இதன்படி காதலனான 22 வயது இளைஞனை கைது செய்த காவல்துறையினர் அவரை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர். இதன்போது அவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.