Uncategorized

கிரீன் கார்ட் சீட்டிழுப்பு..! அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு


கிரீன் கார்ட் சீட்டிழுப்பு என்று அனைவராலும் அறியப்படும் 2024 பன்முகத்தன்மை புலம்பெயர்ந்தோர் விசா சீட்டிழுப்பு திட்டம், இன்றிரவு முதல் இணையத்தள விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு மூலம் மாத்திரமே

கிரீன் கார்ட் சீட்டிழுப்பு..! அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Us America Visa Green Card Lottery 2024 Sri Lanka

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.


ஐக்கிய அமெரிக்க டிவி 2024 பன்முகத்தன்மை விசா திட்டத்தில் (http://dvprogram.state.gov) மின்னணு மூலம் மாத்திரமே பிரவேசிக்க முடியும். காகித உள்ளீடுகள் அனுமதிக்கப்படாது எனவும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சீட்டிழுப்பு விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 5 (இலங்கை நேரப்படி இரவு 9:30) முதல் நவம்பர் 8 (இலங்கை நேரப்படி இரவு 10:30) வரையாகும் என்று கொழும்பின் அமெரிக்க துாதரகம் அறிவித்துள்ளது.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *