பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” சிறையிலிருந்து அவரை இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதான செய்திகள் வெளியாகியுள்ளது.
வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அவர்கள் எவ்வாறான அரச விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
நாட்டுக்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு அரசாங்கமே உத்வேகம் அளிக்கிறது, மாணவர் போராட்டங்கள் தாக்கப்படுவது அதை இலக்காகக் கொண்டா?
தீவிரவாதத்தை நாம் கடுமையாக எதிர்க்கிறோம், பயங்கரவாதம் என்ற பெயரில் அப்பாவி மக்களை சிறையில் அடைப்பதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன் “, எனக் குறிப்பிட்டார்.