செய்திகள்

விரைவில் திருமணம் செய்யவுள்ளவர்களின் கவனத்திற்கு…!


இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் விரைவில் திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களுக்காகவும், உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காகவும் சமையல் பாடநெறி ஒன்றை  ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.


குறித்த நிறுவனத்தின் தலைவர்  சிரந்த பீரிஸ் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.


நிலவியுள்ள பொருளாதார நெருக்கடியில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் இளைஞர் யுவதிகள் தங்களுக்கு தேவையான உணவினை தாமே தயாரித்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.


அதேநேரம் வெளிநாடுகளுக்கு உயர் கற்கை நெறிகளுக்காக செல்லவிருப்பவர்களுக்கும் இந்த பாடநெறி மிகவும் உறுதுணையாக அமையும் என அந்த நிறுவனத்தின் தலைவர்  குறிப்பிட்டுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *