Uncategorized

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சுடு! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு


உயிரிழப்பு

மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


தந்தை மற்றும் இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூவர் பலி

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சுடு! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு | Firing Three Members Of The Same Family Killed

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


உந்துருளியில் வந்த சிலரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள்.

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *