கொழும்பில் ஆடம்பர அலுவலகம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் இலங்கையின் பிரபல வர்த்தகரிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
226 மில்லியன் ரூபா,
60,000 அமெரிக்க டாலர்கள், ஆஸ்திரேலிய டாலர்கள் 100,000 மற்றும் தொழிலதிபரிடம் இருந்து தங்கப் பொருட்களை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.