உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தலைமை அறுவை மருத்துவ நிபுணர் பதவி வகிக்கும் இவரை அமெரிக்க பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
மருத்துவர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல துறைகளில் இவர் சாதனை படைத்துள்ளார்.
இந்திய பூர்வீகம்
இவரது மனைவி ஆலிஸ் சென் ஆவார் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அதேவேளை, மருத்துவர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.