கடந்த ஆண்டு 2 ஆம் எலிசபத் மகாராணியை கொல்ல முயற்சி செய்த இந்திய வம்சாவளி இளைஞன் மீது தற்போது நீதிமன்றம் விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
20 வயதேயான ஜஸ்வந்த் சிங் சைல் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கடந்த 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளில் வில் அம்புடன் திட்டமிட்டே விண்ட்சர் மாளிகையில் அத்துமீறியுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது தேச துரோகம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வேறு சிலரை கொல்ல முயற்சி
இது அவரை கொல்ல முன்னெடுக்கப்பட்ட நகர்வு எனவும் அல்லது நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி எனவும் குறித்த இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, பொதுவெளியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள ஆயுதத்தை அவர் ஏந்தியிருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணியார் மட்டுமின்றி காஷ்மீர் சைல் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலரையும் ஒரே நாளில் கொல்ல முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னெடுக்கபடவுள்ள விசாரணை
முன்னாள் பல்பொருள் அங்காடி ஊழியரான ஜஸ்வந்த் சிங் சைல் கைதான பின்னர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை காவல்துறையினரிடம் உறுதி செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 திகதி முதல் 2 அல்லது மூன்று வாரங்களுக்கு விசாரணை முன்னெடுக்க நீதிபதி Sweeney முடிவு செய்துள்ளார்.
அதுவரை விசாரணைக் கைதியாக ஜஸ்வந்த் சிங் சைல் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.