குப்பை மலைகள்
உள்ளூராட்சி மன்றங்கள் கழிவுகளை அகற்றுவதால் நாடு முழுவதும் பத்தொன்பது குப்பை மலைகள் உருவாகியுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சர் ஜானக வக்கம்புர இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாரியளவில் சேதம்
நான்கு குப்பை மலைகள் காடுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் சுற்றுச்சூழல் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்பது உரம் தயாரிக்கும் நிலையங்கள் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் குப்பைக் குவியல்கள் தொடர்பில் உள்ளுர் அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.