குழந்தைகள் பராமரிப்பு நிலையம் மீது துப்பாக்கிசூடு
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு நிலையத்திலேயே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்கு ஏராளமான குழந்தைகள் காலை முதல் மாலை வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று வழக்கம் போல் பெற்றோர் தங்களது குழந்தைகளை பராமரிப்பு நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் குழந்தைகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தவேளை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சராமரியாக சுட்டுள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள்
இந்த பராமரிப்பு நிலையத்தில் 92 குழந்தைகள் வருவதாகவும் ஆனால் மோசமான வானிலை மற்றும் பேருந்து பழுது காரணமாக இன்றையதினம் 24 குழந்தைகள் மட்டுமே வருகை தந்ததாக பராமரிப்பு நிலையத்தின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
அத்துடன் தாக்குதலுக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் குழந்தைகள் அனைவரையும் தூங்க அனுப்பிவிட்டு தான் மதிய உணவு தயாரிக்க சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த தாக்குதல்கள் குறித்த மேலதிக தகவல்களை தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர், குற்றவாளி உள்ளே நுழைய முயன்றதை நாங்கள் கண்டறிந்தோம், மேலும் அவர் முக்கியமாக கத்தியைப் பயன்படுத்தி பல குழந்தைகளைக் கொன்றார், மேலும் சிலர் உயிர் பிழைத்துள்ளனர்” என்று தாய்லாந்து தேசிய காவல்துறைத் தலைவர் டம்ரோங்சாக் கிட்டிபிரபட் கூறினார்.
காவல்துறையின் அறிவிப்பு
“பின்னர் அவர் வெளியே வந்து, தனது வீட்டிற்கு வரும் வரை வழியில் சந்தித்தவர்களை துப்பாக்கி அல்லது கத்தியால் கொல்லத் தொடங்கினார். நாங்கள் வீட்டைச் சுற்றி வளைத்தோம், பின்னர் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டறிந்தோம்.”
தாக்குதல் நடந்த அன்று காலை, சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு வரவிருந்தார்.
“சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. அதனால், அவர் குற்றங்களைச் செய்ய காரணமான மன அழுத்தத்துடன் மாயத்தோற்றம் கொண்டவராக இருக்கலாம். அவர் குழந்தைகள் தினப்பராமரிப்பு மையத்தில் தொடங்கி அவரது வீடு வரை தனது குற்றத்தை எல்லா வழிகளிலும் தொடர்ந்தார். “எனத் தெரிவித்துள்ளனர்.
படங்கள் -ரொய்ட்டர்ஸ்