Uncategorized

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – தீர்க்கமாக வலியுறுத்தல்!


தமிழர் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. எனவே, காணாமல் போதல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் தீர்க்கமாக வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெறும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம்பெற்ற பொது நிகழ்வின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவை போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காணோமல் போனோர் அலுவலகத்தில் நம்பிக்கையில்லை

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - தீர்க்கமாக வலியுறுத்தல்! | United Nation Human Rights Session 51 Sri Lanka

தன்னார்வ நிறுவன உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.


இலங்கையில் போருக்கு பின்னர் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும், அவை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை.

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலும் இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை.

இதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *