Uncategorized

கட்டாரில் நடைபெரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பாதுகாப்புப் கடமையில் ஈடுபட 950 இலங்கையர்கள் அங்கு பயணம்.


 (அஷ்ரப் ஏ சமத்)

கட்டாரில் நடைபெரும் உலக கால்பந்தாட்டப் போட்டிக்காக அங்கு பாதுகாப்புப் கடமையில் ஈடுபடுவதற்காக இலங்கையில் இருந்து 10 நாட்கள்  பயிற்சி பெற்று அதன் பின் நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்த 950 பேர் அந்த நாட்டில் சேவை செய்வதற்காக 3 மாதங்களுக்கும் மட்டும் விசா வழங்கப்பட்டு இன்றும் நாளையும் பயணமாகின்றனா்.

இவ் தொழில் கோட்டாவை ரஜரட்ட சேவை வெளிநாட்டு ஏஜென்சி, ஜனாப்  அண்சாா்,  சின்னாஸ் ஏஜென்சி ராஜகிரியில் உள்ள மசூர் .ஹாஜி   ஏஜென்சி ஊடாகச் தொழிலாளா்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுச்  கட்டாா் செல்கின்றனா்

இவா்கள் மருத்துவம்  மற்றும் வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகத்தின் மட்டுமே10 ஆயிரம் ருபா செலுத்தி  ஏனைய விமான டிக்கட்  செல்லுதல், வருகை  3மாத கால ,விசா சகலதும் ்இலவசமாக கட்டாா் நாட்டில் உள்ள முகவாா் நிலையங்கள் ஊடாக வழங்கப்படுகின்றது

, அங்கு 2 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை சம்பளம் , மேலதிக கொடுப்பனவு தங்குமிடம் யுனிபோம் இலவசமாக கட்டாா் கம்பனியினால் வழங்கப்படுகின்றது. கூடுதலாக இரானுவம் பொலிஸ் சேவையில் இருந்தவா்கள் ஆங்கிலப் பரீட்சையில் சிித்தியடைந்துவா்களே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்கள். அத்துடன் இவா்கள் 3 மாத காலம் முடிந்தவுடன் தமது நாட்டுககு திரும்பி வருதல் வேண்டும். எனவும் இவா்களுக்கான விமான டிக்கட்டுகள், விசா என்பன பத்தரமுல்லையில் உள்ள

வீடமைப்பு பயிற்சிக் கல்லுாாியில் வைத்து வழங்கி வைக்க்பபட்டது.

இங்கு உரையாற்றிய  இலங்கை நிருவாக சேவை ஓய்வு பெற்ற அதிகாரி  அசோக  எல்ல்கொட உரையாற்றுகையில் இலங்கை எதிா் நோக்கும் பொருளாதாரப் பிரச்சினையில் கட்டா் நாட்டுக்கு இலவசமாகக் சென்று அன்னியச் செலவானியை சம்பாதிப்பதற்கு இலங்கை மற்றும் இந்த முகவா்கள் மற்றும் கட்டாா் நாட்டுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் நமது 3 மாதங்களை அங்கு சிறப்பாக பணியாற்றி மீண்டும் கையில் பணத்துடன் இலங்கை திரும்போவோமானல் நமது நாட்டுக்கு அந்த நாட்டில் நல்ல கீா்த்தியை ஏற்படுத்தி முடியும். என உரையாற்றினாா்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *