Uncategorized

சடுதியாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை! அமைச்சர் வெளியிட்ட தகவல்


இந்த ஆண்டு செப்டம்பர் வரையில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளின் பயணிகள் வருகை தரும் காலகட்டமாகும்.

அந்நிய செலாவணி வருவாய் 

சடுதியாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை! அமைச்சர் வெளியிட்ட தகவல் | Tourist Visit To Sri Lanka

குறிப்பாக ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.



ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த ஆண்டு செப்டெம்பர் இறுதி வரை ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையானது சுமார் 526,000 ஆக பதிவாகியுள்ளது.



அதன் மூலமாக 829 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. எனினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விடவும் குறைவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்” என்றார்.



அதேவேளை, செப்டம்பர் மாதம் வரையில், சுமார் 1.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 300,000 சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *