Uncategorized

அனைத்து மதத்தினருக்கும் அனுமதி..! துபாயில் உள்ள இந்து கோவில் அறிவிப்பு


டுபாயில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலில் அனைத்து மதத்தினருக்கும் அனுமதி உண்டு என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



சிந்தி குரு தர்பார் கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப்பழைமான இந்து கோவில் ஆகும்.

இந்த கோவிலின் விரிவாக்க வேலைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்தன.




டுபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த இந்து கோவில் கடந்த 04 ஆம் திகதி திறக்கப்பட்டது.

அனைத்து மதத்தினருக்கும் அனுமதி

அனைத்து மதத்தினருக்கும் அனுமதி..! துபாயில் உள்ள இந்து கோவில் அறிவிப்பு | All Religions Are Allowed In Dubai Hindu Temple

ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், டுபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.




இந்த நிலையில் இந்து கோவிலானது பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து மதத்தினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.

அனைத்து மதத்தினருக்கும் அனுமதி..! துபாயில் உள்ள இந்து கோவில் அறிவிப்பு | All Religions Are Allowed In Dubai Hindu Temple

டுபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.



அதேவேளை கூட்ட நெரிசலை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *