வசந்த முதலிகே கொல்லப்படவுள்ளதாக வந்த கடிதம்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே கொல்லப்படவுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தனுக்கு அநாமதேய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஊடகங்களுக்கு முன்னர் தெரிவித்த ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தனே கடந்த 4ஆம் திகதி கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
வசந்த முதலிகேவின் சகோதரர் இன்று (08) ஊடகங்களுக்கு இந்தக் கடிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாத்திரை சாப்பிட்டு சாகுமாறு கோரிக்கை
“மாத்திரை சாப்பிட்டு சாகுமாறும் வன்னிலத்தனை வெளியில் காணக்கூடாது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குருநாகலிலிருந்து கடிதம் வந்திருக்கிறது.”