தேன் எடுக்க அடையாள அட்டை
பழங்குடியின மக்கள் காடுகளில் தேன் எடுப்பதற்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த அடையாள அட்டையை வழங்க முன்வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தமது பிரதான தொழிலாக கடற்றொழிலை மேற்கொணடு வருகின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை
ஆனால் நாட்டின் தற்போதைய நிலை, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதும், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குவேனி பழங்குடி நலன்புரி அமைப்பின் தவிசாளரும் மூதூர் பழங்குடியினர் சங்கத் தலைவருமான கே.கனகரத்னம் தெரிவித்துள்ளார்.
தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்த பிரதேசத்திற்கு சென்று தேன் எடுப்பவர்களுக்காக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.