Uncategorized

உக்ரைன் பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா..! புடின் அளித்த உறுதிமொழி


ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக கடந்த வாரம்  உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


இந்நிலையில், குறித்த பிரதேசங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக விளாடிமிர் புடின் ஆசிரியர் தினத்தில் ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உக்ரைனின் அறிவிப்பு

உக்ரைன் பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா..! புடின் அளித்த உறுதிமொழி | Russia Captured Ukrainian City Russia Ukraine War


எவ்வாறாயினும், சமீபத்திய வெற்றிகளுக்கு அமைய லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.


இந்நிலையில், இழந்த எந்தவொரு பிரதேசத்தையும் ரஷ்யா மீட்டெடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.


ஊடகவியலாளர்களிடம் இருந்து சமீபத்திய இழப்புகள் பற்றிய கேள்விகளை எதிர்கொண்ட புடின், இழப்புகள் மீட்கப்படும் எனவும் உக்ரைனிய துருப்புகள் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *