Uncategorized

யாழில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு..! வவுனியாவை சேர்ந்தவர் கைது


கைது 

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

10 எரிவாயு சிலிண்டர்கள் – 03 துவிச்சக்கர வண்டிகள்

யாழில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு..! வவுனியாவை சேர்ந்தவர் கைது | Theft Of Two Wheelers And Gas Cylinders

கோப்பாய் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 3 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *