Uncategorized

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!


கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த செப்டம்பர் மாதம் கனடாவில் 21000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


கடந்த ஓகஸ்ட் மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 5.4 வீதமாக காணப்பட்டதாகவும், செப்டம்பர் மாதம் 5.2 வீதமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகள் திறக்கப்பட்டமை  

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி! | Unemployment In Canada Falls

கோடை காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தொழில் வாய்ப்புக்கள் குறைந்திருந்தது எனவும் தற்பொழுது பாடசாலைகள் திறக்கப்பட்டதனால் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


கல்வி, சுகாதாரம், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.


கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சம்பளங்கள் 5.2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளன.


கடந்த மூன்று மாதங்களாக தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாதம் தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *