செய்திகள்

“அல் குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?” நூல் வெளியீட்டு நிகழ்வு


மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் உஸ்தாத் அஷ்ஷெய்க். எம்.ஏ.எம் மன்ஸூர் அவர்களால் எழுதப்பட்ட  “அல் குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?” நூல் வெளியீட்டு நிகழ்வை  ‘இக்ரஃ இஸ்லாமிய சங்கம்’,  ஜம்மியத்துல் இஸ்லாஹ் அல்-இஜ்திமா கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் உத்மான் லெப்பை முகம்மத் ஜவ்ஹர் , விஷேட அதிதிகளாக  ஜம்மியத்துல் இஸ்லாஹ் அல்-இஜ்திமா’இ யின் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்க் காலித் அல்-மத்கூர்,  குவைத்துக்கான இலங்கை தூதரக உயர் அதிகாரி அப்துல் ஹலீம், மக்தப் அல்-தஆவுன் அல்-இஸ்லாமியின் தலைவர் அப்துல் முஹ்ஸின் ஆகியோரும், இலங்கை, இந்திய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மற்றும் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் உட்பட அதன் நிர்வாக உறுப்பினர்கள், நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் நூலாசிரியரின் நூல் அறிமுகம் காணொளிப் படுத்தப்பட்டது. தொடர்ந்து உரை நிகழ்த்திய  இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் சிரேஷ்ட நிர்வாக சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எம். ஐ. எம் மன்சூர் நளீமி  அவர்கள் இந்நிகழ்வு ஒரு ஆரம்ப நிகழ்வு எனவும் இந்நூலை மக்கள் மத்தியில் பரவலாக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன்  தூதுவர் மற்றும்  ஜம்மியத்துல் இஸ்லாஹ் அல்-இஜ்திமாஇ யின் தலைவர் ஆகியோரது விஷேட உரைகளும் இடம் பெற்றதுடன், கலந்து கொண்டோர் அனைவருக்கும் மும்மொழிகளிலுமான புத்தக பிரதிகள் கையளிக்கப்பட்டன.

அஷ்ஷெய்க் மம்ஷாத் நளீமி அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்கள்.

ஜம்மியத்துல் இஸ்லாஹ் அல்-இஜ்திமாஇ மற்றும் குவைத் அமானத்துல் அவ்காப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த நூலை பிரசுரிக்க உதவியமை குறிப்பிடத்தக்கது.

ஹரீஸ் ஸாலிஹ்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *