ஆளும் கட்சிக்குள் அமைதியின்மை
பிரித்தானியாவின் ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் கொள்கைகள் தொடர்பாக பல வாரங்களாக அமைதியின்மை நிலவிவரும் நிலையில், பிரதமர் லிஸ் ட்ரஸ்சிற்கு பின்னால் அணி திரளுமாறு அமைச்சரவை அமைச்சர் நதீம் ஷஹாவி வலியுறுத்தியுள்ளார்.
வளர்ச்சி திட்டங்கள் தாமதிக்கப்படும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் ஆளும் கென்சவேட்டிவ் கட்சி தோல்வியை சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ், ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டுமே தவிர இடையூறு விளைவிப்பராக இருக்க கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நதீம் ஷஹாவியை போன்று ஏனைய அமைச்சரவை அமைச்சர்களும் கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
லிஸ் ட்ரஸ்சை வெளியேற்றும் சூழல் ஏற்படுமா
கென்சவேட்டிவ் கட்சி, லிஸ் ட்ரஸ்சை வெளியேற்றும் சூழல் ஏற்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நதீம் ஷஹாவி, லிஸ் ட்ரஸ்சின் பின்னால் அனைவரும் அணி திரள வேண்டும் என கூறியுள்ளார்.
தாமதப்படுத்தும் செயற்பாடுகள் கட்சிக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதாார வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் எரிசக்தி கட்டணங்களைக் குறைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கென்சவேட்டிவ் கட்சியின் அரசாங்கத்தை விட தொழிற்கட்சியின் அரசாங்கதையே தாம் விரும்புவதாக ஸ்கொட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்ரேஜன் தெரிவித்த கருத்தையும் நதீம் ஷஹாவி விமர்சித்துள்ளார்.