கிண்டல் செய்யும் மாணவர்கள்
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீட பீடாதிபதி கலாநிதி இ.எம்.பி.எஸ்.ஏகநாயக்க, மாணவர் தலைவர்கள் தம்மை கிண்டல் செய்வதாகவும் அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிடுவதாகவும் தெரிவித்து காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்றையதினம் மஹனுர காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று இந்த முறைப்பாட்டை முன்வைத்தார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
உச்சம் தொட்டுள்ள பகிடிவதை
இதேவேளை பேராதனை பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாக பகிடிவதை உச்சம் தொட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட பகிடிவதையால் மாணவர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
பகிடிவதைக்கு ஆதரவான மற்றும் எதிரான இரு மாணவர் குழுக்களிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.