விருது
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் நடாத்திய 15ஆவது பன்னாட்டு மாநாடு 07/10/2022 அன்று இந்தியாவில்
தமிழ்நாட்டில் உள்ள இராசா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஈழத்தை சேர்ந்த கலைஞர் NM.பாலச்சந்திரன் அவர்களுக்கு ஈழத்தில் இயல் இசை நாடகத்திற்க்கு அவராற்றிய கலைப்பணிக்காக “உலகத் தமிழ் மாமணி “விருது வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விருது, உலகத் தமிழர் பண்பாட்டு இயகத் தலைவர் திருஅ.இளஞ்செழியன் மற்றும் முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களாலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.