Uncategorized

திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மண்டபத்தில் நுழைந்து மணப்பெண்ணை கைது செய்த பொலிஸார் #இலங்கை


மொரட்டுவை-அங்குலான திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது, சிறுவயது திருமணம் இடம்பெறுவதாக தெரிவித்து இளம் மணமகள் மற்றும் மணமகன் ஆகியோரை அங்குலானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் 1929 அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண மணப்பெண்ணின் வயது 15 வருடங்களும் 6 மாதங்களும் எனவும் மணமகனின் வயது 19 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் தற்போது பொலிஸ் காவலில் உள்ளதாகவும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *