யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைகள் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு நாளை (10.10.2002) திங்கட்கிழமை காலை 9.00மணியளவில் இடம்பெறவுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சி.குமரவேல் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாணம் பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, தென்மராட்சி அபிவிருத்திக் கழக தலைவர் வைத்திய கலாநிதி ஆ.புவிநாதன், வே.ரமணா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.