பாரிய மின்னல் தாக்கம் தொடர்பான முக்கிய எச்சரிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான முன்னெச்சரிக்கை நிலையம் விடுத்துள்ளது.
இன்றிரவு 11 மணிவரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நடைமுறையில் உள்ள பிரதேசங்கள்
குறித்த அறிவிப்பில் ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருணாகலை மாவட்டத்திலும் இடைக்கிடை இடியுடன் கூடிய பாரிய மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாரிய மின்னல் தாக்கம் மற்றும் இடியுடனான வானிலையின் போது திறந்த வௌியில் சஞ்சரிக்க வேண்டாம் என்றும் மரங்களுக்கு கீழ் இருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.