Uncategorized

சென்னை – பலாலி விமான சேவை : வட பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்


சென்னை – பலாலி விமான சேவை

சென்னைக்கும் பலாலிக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருடங்களுக்கு பின்னர் அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.



இந்தத் தகவலை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.



பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமான அளவில் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைக் கட்டணம்

சென்னை - பலாலி விமான சேவை : வட பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் | Palaly To Chennai Flight Ticket Price



விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் குறைவான விமான சேவைக் கட்டணங்கள் வடக்கு மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.



இதேவேளை விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைத் தளபதி சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *