இலங்கை செலுத்த வேண்டிய கடன்
இலங்கை செலுத்த வேண்டிய கடனை செலுத்துவதற்கான வழிமுறையை யாராவது எமக்கு கூறினால் அது இவ்வுலகில் புகழாகவும் மறுமையில் பாக்கியமாகவும் அமையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடனை செலுத்துவதற்கு இதுவரை அரசியல் தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்
அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1298 பில்லியன் ரூபா எனவும், அதில் 1115 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்படுவதாகவும், அதாவது அரசாங்கத்தின் வரி வருமானத்தில் எண்பத்தாறு வீதம் அதற்காக செலவிடப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச வருமானத்தில் இவ்வளவு சதவீதத்தை அரச சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக செலுத்தும் ஒரே நாடாக இலங்கை இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
லையில் சிக்கி வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாமல் இலங்கை முதன்முறையாக உலகிற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.