அநுராதபுரம் – ஓயாமடுவ குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 10 மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் இருவரை மதுபானம் அருந்துமாறு கட்டாயப்படுத்திய சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அவசர சேவை இலக்கமான 119 ஊடாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து 25 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இரு சிறுவர்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11ஆம் திகதி வரை விளக்கமறியல்
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.