இலங்கையில் அதிகாரங்களை மீறும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்ட விரோதமாக செயற்படும் காவல்துறை உத்தியோகத்தர்கள் ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க வேண்டி ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நீதியின் சக்கரங்கள் நிச்சயமாக அரைக்கும்
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறும் காவல்துறை அதிகாரிகள் கடந்த காலங்களில் தன்டனைகளை எதிர்நோக்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலர் இழப்பீடு மற்றும் பதவி உயர்வுகளை இழந்தனர். சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பின்னர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது,
எனவே நீதியின் சக்கரங்கள் மெதுவாக அரைக்கலாம், ஆனால் அவை நிச்சயமாக அரைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.