Uncategorized

ஜோன்ஸ்டனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் !


குற்றப்பத்திரிகை

வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.டி.ஏ.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

ஜோன்ஸ்டனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ! | Charge Sheet Filed In Colombo High Court

குற்றஞ்சாட்டப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குற்றப்பத்திரிகைகள் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.



அதன்பின், விசாரணை நவம்பர் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *