Uncategorized

டொலர்கள் இன்றி 20 நாட்களாக தவம் கிடக்கும் எரிபொருள் கப்பல்


20 நாட்களாக காத்து கிடக்கும் கப்பல்

7 கோடி டொலர்கள் அல்லது 2500 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் இல்லாத காரணத்தினால் 99,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் இன்று (10) தெரிவித்தார். 


கப்பல் நங்கூரமிட்ட ஒரு நாளுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று கூறிய அதிகாரி, அதன்படி கப்பல் தாமதக் கட்டணமாக 30 லட்சம் டொலர்கள் அதாவது 110 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றார்.

டொலர்கள் இன்றி 20 நாட்களாக தவம் கிடக்கும் எரிபொருள் கப்பல் | Crude Oil Ship At Sea For 20 Days Without Dollars

தொடர்ந்தும் கலந்துரையாடல்

Coral Energy நிறுவனத்திடம் இருந்து முற்பதிவு செய்யப்பட்ட மசகு எண்ணெய் அடங்கிய இந்தக் கப்பல் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்ததாகவும், அதனை விடுவிப்பது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

டொலர்கள் இன்றி 20 நாட்களாக தவம் கிடக்கும் எரிபொருள் கப்பல் | Crude Oil Ship At Sea For 20 Days Without Dollars


குறித்த கச்சா எண்ணெய் தரமற்றது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன, மேலும் இதுபோன்ற கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எரிசக்தி துறையில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *