கனடாவின் பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகள் உள்ளிட்ட அட்லாண்டின் கனடா பகுதியில் விவசாயிகள் பாரிய அளவிலான பூசணிக்காய்களை காட்சிப்படுத்தினர்.
இந்தப் பகுதியில் ஆண்டு தோறும் மிகப் பெரிய பூசணிக்காய் செய்கையாளரை தெரிவு செய்யும் போட்டியானது கடந்த மூன்று தசாப்த காலமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராட்ச பூசணிக்காய் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் இயற்கை பசளை வகைகளை பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பூசணி விளைச்சல்
இந்தப் பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் தங்களது பூசணி விளைச்சலை காட்சிப்படுத்துவதுடன் போட்டிகளையும் நடாத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டிலும் இவ்வாறான போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.