விவசாயிகளின் வருமானம்
தற்போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானம் தொடர்பான விபரத்தை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வேளாண் ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் மூலம் இந்தத் தகவல்களைப் பெற்று வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
விவசாயிகளின் மாத வருமானம் பெறப்பட்டு, அவர்களின் கையெழுத்தும் இங்கு எடுக்கப்படுகிறது.
கையை விரித்த அதிகாரிகள்
என்ன காரணத்திற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தெரியவில்லை என அவர்கள் தெரிவித்ததாக விவசாயிகள் கூறியுள்ளனர்.