Uncategorized

நாட்டை அழித்த ஏழு மூளை காகம்..! கடுமையாக விமர்சித்த சஜித்


சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை, கைப்பாவையாக பயன்படுத்தி, தமக்கு நெருக்கமான அடிமைகளுக்கு அமைச்சு பதவிகளை ராஜபக்ச குடும்பத்தினர் வழங்குவதற்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தெனியாய பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய சஜித் பிரேமாச, நாட்டை கட்டியெழுப்பும் குழுவின் தலைவராக வங்குரோத்து நிலையில் உள்ள ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த நாமல் இளவரசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

அமைச்சு பதவிகளையே எதிர்பார்க்கின்றனர்

நாட்டை அழித்த ஏழு மூளை காகம்..! கடுமையாக விமர்சித்த சஜித் | Sri Lanka Politics Rajapaksha Family Sajith

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” நாடாளுமன்றத்திற்கு வந்து, ஒவ்வொருவரும் உரத்தைப் பெற்றுத்தருவதாக கூறுகின்னறனர். எனினும் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்து கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அனைத்தையும் உள்ளே இருந்துகொண்டு கூறுகின்றனர்.


ஒரு நொடி கூட விவசாய நிலத்தில் பாதத்தை வைக்க மாட்டார்கள். ஒரு நொடி கூட விவசாயிகள் மத்தியில் வர மாட்டார்கள்.ஒரு நொடி கூட உங்களின் வியர்வையின் வாசம், துக்கம். கண்ணீர், வேதனை, உள்ளக் குமுறல்கள் இந்த அதிபருக்கும் இந்த அரசாங்கத்திற்கும் இந்த அமைச்சர்களுக்கும் விளங்காது. 

அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர். அவர்கள் அமைச்சு பதவிகளையே எதிர்பார்க்கின்றனர். எத்தனை அமைச்சு பதவிகளை தருவார்கள். எவ்வளவு தருவார்க்ள. அமைச்சரவை அமைச்சா தருகின்றனர். இராஜாங்க அமைச்சா தருகிகின்றார்கள்.

ஏழு மூளை காகம்

நாட்டை அழித்த ஏழு மூளை காகம்..! கடுமையாக விமர்சித்த சஜித் | Sri Lanka Politics Rajapaksha Family Sajith



இங்கு புண்ணிய வழிபாடுகளை மேற்கொள்ளும் 12 பேர் இருக்கின்றனர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். ஏன் அதனை செய்கின்றனர். அமைச்சரவை அமைச்சு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்.



யார் அமைச்சு பட்டியலை தயாரிப்பது. ரணில் விக்ரமசிங்க அதிபர் அதை நாங்கள் நம்புகின்றோம் ஆனால் அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களுக்கான பட்டியலை அனுப்பியது இந்த நாட்டை அழித்த, ஏழு மூளை காகம் தானே.


நிதி அமைச்சரான உடன், நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அவர் கூறினார். எனினும் அவருக்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஆங்கிலத்தில் கூட ஒரீரு வார்த்தைகளை கூட பேச முடியவில்லை.



இராஜதந்திர தொடர்புகளுக்கு ஆங்கிலம் அத்தியாவிசயமானது. அதனை நன்றிகா நினைவில்வைத்துக்கொள்ளுங்கள். இராஜதந்திர ரீதியான தொடர்புகளின் போது கருத்துப் பரிமாற்றங்களின் போது தவறுகள் இடம்பெறலாம்.



ஏழு மூளை காகம், 38 பேருக்கு நியமனம் வழங்கிவிட்டு தற்போது 12 பேருக்கான பட்டியலை தயாரிக்கின்றது.

இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அனைவரும் நாட்டை அழித்த, ராஜபக்ச குடும்பத்தினரின் அடிமைகள்” எனக் குறிப்பிட்டார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *