சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அமைச்சு பதவி கொடுத்து அமரச் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாளைக்கே என்றாலும் என்னால் அமைச்சுப் பதவியில் அமர முடியும், ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை.
புதிய நாடாளுமன்றம்
தேசிய சபை என்றால் நாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, நல்ல விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும். ஆனால் அதனை பயன்படுத்த அரசாங்கம் தவறுமானால் அதோ கதிதான்.
எப்படியிருந்தாலும், அடுத்த வருடத்தில் ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய நாடாளுமன்றம் வேண்டும். அதுவே எங்களது தேவை. அதற்காக நாங்கள் நிச்சயமாக போராடுவோம்.
அதன் மூலமாகத்தான், ஐஎம்எப் ஆக இருந்தாலும் சரி, உலக வங்கியாக இருந்தாலும் சரி, ஆசிய அபிவிருத்தி வங்கியாக இருந்தாலும் சரி, ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி சிறிலங்காவை நம்பி கடன் கொடுப்பார்கள்.
எனவே அடுத்து வருபவற்றை பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.