Uncategorized

7 கடல் மைல் நீந்தி, தமிழகம் சென்ற இலங்கை தமிழ் ஏதிலி..!


24 அகவையைக்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பாக்கு நீரிணையில் ஏழு கடல் மைல் தொலைவை நீந்தி தனுஷ்கோடியை அடைந்துள்ளார்.


அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடியை அடைந்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் என்ற அஜய் என்பவரே தமிழக கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு

தம்மையும் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தையும் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு ஏற்றிச் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியபோது தாம் கடலில் குதித்ததாக அவர் தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்டத்தில் இருந்து கானும் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் ஒன்றும் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.


அரிச்சல்முனைக்கு அருகிலுள்ள ஐந்தாவது தீவு அருகே சென்றபோது, நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.


இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு, 




Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *