களனிவெளி மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் இன்று (10) காலை முதல் வழமை போன்று இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் திருத்தப்பணிகள் காரணமாக கொஸ்கமவில் இருந்து அவிசாவளை வரையிலான பகுதி நேற்று (07) இரவு 8:30 மணி முதல் இன்று (09) மாலை 6:00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இதனால்,தொடருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.
நிறைவடைந்த திருத்தப்பணிகள்
எவ்வாறாயினும், குறித்த திருத்தப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் நேற்று (09) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட தொடருந்தானது அவிசாவளை வரை பயணிக்கவுள்ளதாக தொடருந்து பிரதான கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.