செய்திகள்

மின் கட்டணம் செலுத்தவும் பணமில்லை, 10757 ரூபா மாத்திரமே வங்கியில் உள்ளது – நான் எப்படி பிரியமாலியிடம் பணத்தை கொடுப்பேன்திலினி பிரியமாலியிடம் பணத்தை வழங்குவதற்கு மாத்திரமல்ல விகாரையின் மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலைமையில் தான் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மோசடியாளர்களுக்கு பணத்தை வழங்குவதை விடுத்து இந்த மாதம் விகாரயின் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமையில் நான் இருக்கின்றேன். கோடிக்கணக்கில் நான்  பணத்தை கொடுத்ததாக  எவரும் குற்றம் சுமத்தலாம்.


பணத்தை வழங்கி இருந்தால், அது பற்றி தேடி தகவல்களை வெளியிடுமாறு நான் சவால் விடுக்கின்றேன். எனக்கு வங்கிகளில் பல கணக்குகள் இல்லை. ஒரு வங்கியில் மாத்திரமே எனக்கு கணக்கு உள்ளது. அதிலும் 10 ஆயிரத்து 757 ரூபா மாத்திரமே இருக்கின்றது.


எனக்கு வீ. எயிட் ஜீப் ஒன்றை வழங்கியதாகவும் சமூக ஊடகங்களில் காணப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஒருவரே எனக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துக்கொடுத்தார். இவை அனைத்தும் புனையப்பட்ட பொய் கதைகள் என ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.


எது எப்படி இருந்த போதிலும் திலினி பிரியமாலி என்ற பெண் கோடிஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகை, நடிகர்கள், பௌத்த பிக்குமார் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஒரு பிக்கு அவரது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் மற்றுமொரு பிக்குவுடன் இணைந்து தங்கத்தை வழங்குவதாக கூறி, சில வர்த்தகர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *