சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கித் தவிக்கும் ஆபிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அடிமைகள் போன்றே, சீனாவின் அதிகாரிகளால் நடத்தப்படுவதான பல காட்சிகள், செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இதில் கொடுமை என்னவென்றால் அந்தந்த நாடுகளின் அரசாங்கமோ? சட்டமோ? தொழிலாளர்கள் தரப்பில் நியாயம் இருந்தால் கூட, தொழிலாளர்கள் பக்கம் நின்று செயற்பட முடியாது. சீனா அதிகாரிகளின் பக்கம் தான் நின்றாக வேண்டும்.
ஏனென்றால், திருப்பிச் செலுத்த முடியாத கடன்களை எல்லாம் சீனாவிடமிருந்து பெற்று பெரும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன அந்த நாடுகள்.
சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம்
அவர்களால் என்றைக்குமே சீனாவை பகைக்க முடியாது. சீனா கூறுகின்ற அத்தனைக்கும் தலை அசைப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே கிடையாது. இ
துதான் சீனா தற்போது மேற்கொண்டு வருகின்ற “சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம்”
இத்தகைய கடன் பொறிக்குள் சிக்குண்ட கென்யா, கொங்கோ, விக்கொக் போன்ற ஆபிரிக்க நாடுகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதேபோலவே சிறிலங்காவும் சிக்கிக்கொண்டிருக்கிறது.