உருகுணை பல்கலைக்கழகத்தின் சுமார் 200 இற்கும் அதிகமான இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உருகுணை பகல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பகிடி வதை
இந்நிலையில் குறித்த மாணவர்களுக்கு பகிடி வதை மேற்கொண்டமையினால் குறித்த மாணவர்களுக்கு இவ்வாறு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உருகுணை பல்கலைக்கழகத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் சன்ன யஹத்துகொட இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.