சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ள நிதி வசதி தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சிறிலங்கா அமைச்சரவைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதி பங்களிப்பு தொடர்பாக அறிவித்ததுடன், சிறிலங்கா அமைச்சர்களுக்கும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது கிடைத்துள்ளது.
நெருக்கடியைத் தீர்க்க முன் வந்துள்ள ஐஎம்எஃப்
நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியை வழங்க ஊழியர்மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.