Uncategorized

கடையொன்றில் தீ விபத்து! முதியவர் பலி



மிரிஹான அத்துல்கோட்டே சந்தியில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இந்த தீ விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றறுள்ளது.


லக்ஷ்மன் சரத் குமார என்ற 63 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தீ ஏற்படும் போது இந்த நபர் கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்தாகவும் அவர் உறங்கிக்கொண்டிருந்த இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் 

கடையொன்றில் தீ விபத்து! முதியவர் பலி | Old Man Died In A Fire Accident In A Shop

உயிரிழந்த இந்த நபர் பிரதேசத்தில் இருக்கும் கடைகளில் கூலி வேலை செய்து வந்தவர் எனவும் சுகவீனமான நிலைமையில் இருந்த அவருக்கு கடை உரிமையாளர் தங்குமிட வசதியை வழங்கி இருந்தார் எனவும் தெரியவந்ததுள்ளது.



தீ விபத்துக்கான காரணம் நுளம்பு சுருளா அல்லது மின் ஒழுக்கா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கடை முற்றாக எரிந்துள்ளதுடன் ஏற்பட்ட நஷ்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை.

தீ பரவியதை அடுத்து அங்கு சென்ற கோட்டே நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன் மின்சார சபை ஊழியர்கள் மின் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.



நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர். மேலும் நீதவான் விசாரணைகளும் நடைபெறவுள்ளன.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *