Uncategorized

தலைக்கு மேலால் சீறிப்பாய்ந்த ரஷ்ய ஏவுகணை -மயிரிழையில் தப்பிய உக்ரைன் யுவதி (காணொலி)


பயங்கரமான தருணம்

ரஷ்ய ஏவுகணை ஒன்று தனது தலைக்கு மேலால் சீறிப் பாய்ந்து சென்று வெடித்த பயங்கரமான தருணத்தை உக்ரைனிய இளம் பெண் ஒருவர் காணொலியாக பதிவு செய்துள்ளார்.


கிரிமியா பாலம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நேற்றையதினம் பாரிய ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்திருந்தது.இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 08பேர் பரிதாபகரமாக கொல்லப்பட்டனர்.

தலைக்கு மேலால் சீறிப்பாய்ந்த ரஷ்ய ஏவுகணை -மயிரிழையில் தப்பிய உக்ரைன் யுவதி (காணொலி) | Ukrainian Girl Survives Russian Missile Strike








இந்த நிலையில் , உக்ரைனிய தலைநகர் கீவ்வின் வீதியில் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் மிகுந்த அச்சத்துடன் நடந்து சென்ற யுவதியின் தலைக்கு மேலால் ஏவுகணை ஒன்று சீறிப்பாய்ந்து வெடித்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தலைக்கு மேலால் சீறிப்பாய்ந்த ஏவுகணை

அந்த யுவதி வீதியில் நடந்து கொண்டே தனது தொலைபேசியில் செய்தியை பதிவு செய்து கொண்டு இருக்கும் போது ரஷ்ய ஏவுகணை ஒன்று அவரது தலைக்கு மேலால் சீறிப்பாய்ந்து சென்று அருகில் உள்ள கட்டடத்தின் மீது வெடித்து சிதறியதில், அங்கிருந்த பறக்கும் குப்பைகளால் தாக்கப்பட்டார்.



இந்த சம்பவத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய அவர் அவ்விடத்தை விட்டு ஓடத் தொடங்கியதுடன், அதிர்ச்சியடைந்து திகைத்துப் போயிருந்தார்.


உக்ரைன் ஊடகமான NEXTA இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது, மேலும் அதில் பெண் ஒருவர் கீவில் ஒரு காணொளியை செய்தியைப் பதிவு செய்து கொண்டிருந்தவேளை வெடிக்கும் அலையால் தாக்கப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *