யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தாய், தனது 15 வயது மகன் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை எனக் கூறி, ‘எனது மகன் எனக்கு வேண்டாம்’ என எழுதிய கடிதத்துடன் தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, பொலிஸாரால் குறித்த சிறுவன், சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து, சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு, நீதிமன்று உத்தரவிட்டதற்கு அமைய, சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.