Uncategorized

வறுமையின் பிடியில் இலங்கை மக்கள் – பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


வறுமையில் வாடும் இலங்கை மக்கள்

இலங்கையில் தற்போது 9.6 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.


மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் அத்துகோரள, 2019ஆம் ஆண்டில் நாட்டில் சுமார் 3 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளனர், அதாவது அவர்கள் வறுமையில் வாடுவதாக சுட்டிக்காட்டினார்.

வறுமையின் பிடியில் இலங்கை மக்கள் - பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | 96 Million In Sri Lanka Suffering From Poverty

அதிகரித்துள்ள தொகை

வறுமையின் பிடியில் இலங்கை மக்கள் - பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | 96 Million In Sri Lanka Suffering From Poverty

“ஆனால் இந்த எண்ணிக்கை இப்போது 9.6 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.”

இலங்கையில் தற்போது 42 வீதமான மக்கள் வறுமையில் வாடுவதாக தமது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


அண்மையில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையின் வறுமை விகிதம் சுமார் 26% எனத் தெரியவந்துள்ளது, ஆனால் இன்னும் பலர் உண்மையில் நாட்டில் வறுமையில் வாடுகிறார்கள் என்பது தெளிவாகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *