செய்திகள்

ரணிலின் யோசனைக்கு, மைத்திரி ஆதரவு – Jaffna Muslimஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சுதந்திரக்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருக்கும்போது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்டமூலம் வந்தபோது, அதற்கு உடன்படவில்லை.

எனினும், தற்போதாவது அந்த முடிவு தவறு என கருதி, மாற்றம் மேற்கொள்ளப்படுவது சிறந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *